இன்று முதல் திருப்பதியில் 12,750 பேர் தரிசனத்துக்கு அனுமதி.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் மாதம் முதல் திருப்பதி கோவில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 13-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அம்மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, திருப்பதி கோவிலில் கடந்த 8-ம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை கோவில் நிர்வாகம் அனுமதித்தது. பின்னர், 11-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை திருப்பதியில்மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நாளொன்றுக்கு 12 ,750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உள்ளனர்.