இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பருவமழை தொடங்க உள்ளது.!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பருவமழை காலம் தொடங்கிவிட்டது. என இந்திய வானிலை ஆய்வுத்துறை (Indian Meteorological Department ) தலைவர் குலதீப் சிவஸ்தவா தெரிவித்துள்ளார்.
அதன் படி, மேற்கு கிழக்கு பகுதி ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பருவமழை சீசன் தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் டெல்லியில் பருவமழை தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீகார், இமயமலை பகுதியை ஒட்டியுள்ள மேற்கு வங்கம், உத்திர பிரதேஷம், கிழக்கு ராஜஸ்தான், சீக்கியம், அசாம், மேகாலயா ஆகிய பகுதிகளில் பருவ மழை தீவிரமாக பெய்யக்கூடும் எனவும்,
ஜார்கண்ட், ராயலசீமா , மேகாலயா, தெற்கு கடற்கரை பகுதிகளான அந்திர பிரதேஷம் மற்றும் தமிழ்நாடு, பஞ்சாப்பின் பெரும்பாலானபகுதிகளில், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.