ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி.! பாகிஸ்தான் பிரதமர் பேச்சால் புதிய சர்ச்சை.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பு தலைவரான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எத்தனை உயிர்களை தியாகம் செய்துள்ளது. இருந்தும் உலக நாடுகளின் பார்வையில் பாகிஸ்தான் எவ்வாறு விமர்சிக்கப்பட்டது என தனது உரையினை நிகழ்த்தினார்.

அதில் அவர் மேலும் கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு உறுதுணையாக இருந்தது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய எந்த நாடும் பாகிஸ்தான் அளவிற்கு விமர்சனங்களை சந்தித்தது இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ‘ அல் கொய்தா தீவிரவாத அமைப்பு தலைவரான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு ஷாகீத் என்றார். அதாவது அவரை தியாகி என கூறினார். அவரை நட்புநாடான அமெரிக்கா பாகிஸ்தான் உள்ளே வந்து எங்களிடம் சொல்லாமலே கொன்றது. அது பெரிய அவமானம் என குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, பல்லாயிரக்கனான உயிர்சேதத்திற்கு காரணமாயிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என இம்ரான் கான் , பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கூறியது பெரும்பாலோனரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.