குணமடைந்தவர்களின் விகிதம் 57.43% ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சகம்.!
இதுவரை மொத்தம் 2,71,696 நோயாளிகள் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் விகிதம் 57.43% என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,73,105 ஆக உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேரை இந்த வைரஸ் புதிதாக பாதித்துள்ளது. இவர்களில், 1,86,514 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிலாந்தாவர்களின் எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,012 நோயாளிகள் குணமடைந்துள்ளார்கள். இதுவரை மொத்தம் 2,71,696 நோயாளிகள் COVID19 குணப்படுத்தியுள்ளனர். குணமாணவர்களின் விகிதம் 57.43% ஆக அதிகரிப்பு என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.