மக்கள் சரியான நேரத்தில் தேவையான இரத்தத்தை பெற அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் அதிரடி முயற்சி!

மக்கள் சரியான நேரத்தில் தேவையான இரத்தத்தை பெற மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் அதிரடி முயற்சி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை காட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இந்த முக்கியமான காலகட்டத்தில்,  இரத்தத்தை எளிதில் பெறுவதற்காக மத்திய செஞ்சிலுவை சங்கம் (ஐ.ஆர்.சி.எஸ்) உடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வியாழக்கிழமை ,ஈ ப்ளட் சர்வீசஸ் என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.

இந்த மொபைல் பயன்பாட்டின் மூலம் இரத்தம் தேவதையானவர்கள் விண்ணப்பித்தால், சரியான நேரத்தில் இரத்தத்தை பெற உதவியாக இருக்கும் என்றும், மக்கள் நான்கு யூனிட் ரத்தம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.