புடவையில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட சரவணன் மீனாட்சி தொடர் நாயகி.!
சரவணன் மீனாட்சி தொடரின் நாயகியான ரச்சிதா மகாலட்சுமியின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மீனாட்சியாக அறிமுகமானவர் ரச்சிதா . கதாநாயகன் மாறினாலும் அடுத்தடுத்த பகுதிகளில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவரது கியூட்டான சிரிப்பாலும், பேச்சாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார்புரம் என்ற தொடரில் கணவரான தினேஷூடன் நடித்து வருகிறார்.
வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையை அணிந்து கொண்டு மங்களகரமான தோற்றத்தில் ரசிகர்களை கவரும் வகையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.