14வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு பேர்.! மறுத்ததால் எரித்து கொலை.!

Default Image

14 வயது சிறுமி  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்களன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் பெமேடாரா மாவட்டத்தை சேர்ந்த 14வயது சிறுமி வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் இருந்த போது அவரது பள்ளியில் படித்தவர்களான 22வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு பேர் அவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த சிறுமியை இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பிடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து உடனடியாக சிறுமியை கிராமத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடல்நிலை மோசமானதால் அங்கிருந்து ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அந்த சிறுமி தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனையடுத்து சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி கடந்த புதன்கிழமை காலமானார். அங்கு அவரது அறிக்கையை நிர்வாக மாஜிஸ்திரேட் பதிவு செய்துள்ளார். அந்த அறிக்கையின் படி ஐபிசி மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் என்ற போக்ஸோ சட்டத்தின் கீழ் ராய்ப்பூர் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, வழக்கு பெமேடாராவில் உள்ள காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு குழந்தையை கொன்ற குற்றவாளிகளான இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்