நாடு திரும்பும் வெளிநாட்டினருக்கு நெறிமுறைகளை கூறிய கேரள அரசு.! நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்.!

Default Image

வெளிநாடுகளிலிருந்து மாநிலத்திற்கு திரும்பும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நெகட்டிவ் சான்றிதழ் வாங்கிய பின்னரே விமானத்தில் அனுமதிக்கப்படுவார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெளி மாநிலங்களில் இருந்து தங்களது ஊர்களுக்கு திரும்பும் வெளிநாட்டினர்கள் அனைவரும் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பு கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்ய வேண்டும் என்றும், அதற்கான நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்றும், அவை இல்லாதவர்கள் வருகையின் போது ஆன்டிபாடி பரிசோதனைக்கு உட்படுத்தப்மடுவார்கள் என்று ஜூன் 24 அன்று கேரள அரசு கூறியிருந்தது.கட்டாய சோதனை நிபந்தனைகளை எதிர்க்கட்சி காங்கிரஸ் உட்பட பல தரப்பினரும் எதிர்த்தனர். ஆனால் மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு ஹோஸ்ட் நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் சோதனை வசதிகளை வழங்குவதற்காக மையத்தின் உதவியை கேரள அரசு கோரியது.

அதன் படி வெளிநாடுகளான ஓமான், சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் சிக்கி தவிக்கும் கேரள மக்களை மீண்டு கொண்டு வருவதற்கான மாநில அரசின் நோகத்தை கருத்தில் கொண்டு புதிய நெறிமுறைகளை வெளியிட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. சோதனை செய்வதற்கு சாத்தியமான இடங்களில் மாநிலங்களில் திரும்பி வருபவர்கள் ஒவ்வொருவரும் சோதனைக்கு உட்படுத்துவதற்கும், சான்றிதழுடன் பயணிக்கவும், பயணத்தை தொடங்குவதற்கு முன்புள்ள 72 மணி நேரத்தில் இந்த சோதனைகள் யாவும் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கேரள அரசின் அங்கீகரிக்கப்பட்ட குழுவால் விமான நிலையங்களுக்கு வந்தவுடன் தேவையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லாத அறிகுறியற்ற நபர்கள் உடனடியாக ஆன்டிபாடி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது மக்களின் பாதுகாப்பிற்கு கொரோனா வைரஸ்க்கான நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்றும், பயணிகள் அனைவரும் தங்கள் விவரங்களை கோவிட் 19 ஜாக்ரதா போர்டில்3பதிவு செய்ய வேண்டும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா மற்றும் குவைத்திலிருந்து வருபவர்கள் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பிபிஇ கிட்களை அணிய வேண்டும் என்றும், யுஏஇ மற்றும் கத்தார் நாட்டை சேர்ந்த பயணிகள் N-95 முகமூடி, முக கவசம், மற்றும் கையுறைகளுடன் கோவிட் இலவச அந்தஸ்துக்கான ஆதாரங்களையும் வைத்திருக்க வேண்டும். சோதனைக்கு சாத்தியமில்லாத ஓமான் மற்றும் பஹ்ரைனில் இருந்து வரும் பயணிகள் N-95 முகமூடி, முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தால் விமானத்தில் ஏற முடியும் என்று கூறியுள்ளார். அனைத்து கேரள மக்களும் மாநிலத்திற்கு திரும்ப வேண்டும். எனவே அவர்களுக்கு மாநில அரசு இலவச சிகிச்சை அளிப்பதாகவும், வயதானவர்களையும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் குணப்படுத்தி உள்ளதாகவும் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனி விமானம் மூலம் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்