லடாக் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா…? வெளியான புகைப்படம்.!

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த  15-ம் தேதி  சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொண்டது. ஆனால், இந்த பேசுவார்த்தை நடந்த பிறகு செயற்கைகோள் படங்கள் வெளியானது. அதில், கல்வான் ஆற்றில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் சீன கட்டமைப்புகள் மேலும் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

இந்த படங்கள், மோதல் நடந்த அருகில் உள்ளது. மே 22 -ம் தேதி முந்தைய செயற்கைக்கோள் படங்கள் இந்த இடத்தில் ஒரு கூடாரம் இருப்பதைக் காட்டுகிறது. புதியதாக வெளியான படத்தில்  கட்டுமானம் போன்ற உயர்ந்த இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன் இந்த இடத்தில்  தங்குமிடங்கள், சீன முகாம்கள் இல்லை.

author avatar
murugan