முதலமைச்சருக்கு சிறையில் உயிரிழந்த தந்தை,மகனின் இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது ? கனிமொழி கேள்வி
முதலமைச்சருக்கு சிறையில் உயிரிழந்த தந்தை,மகனின் இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடிய வில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்முறைதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெளிவாகத் தெரிந்தும், உண்மைக்கு புறம்பாக பேசும் முதல்வர் கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது எப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்முறைதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெளிவாகத் தெரிந்தும், உண்மைக்கு புறம்பாக பேசும் முதல்வர் கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது எப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்? 2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 24, 2020