இனி Online பொருள்களில் தயாரித்த நாட்டின் பெயரை குறிப்பிட வேண்டும்.!

Default Image

ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தொடங்கியுள்ளது. பெரும்பாலான சீன பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், இது குறித்து வாடிக்கையாளர்கள் தெரியாமல் இருக்கின்றனர் என CAIT கூறுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு பொருளிகளிலும் (country of origin) அதாவது, இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரை கட்டயமாக குறிப்பிட வேண்டும் என  அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு BCCI-யை விவோ-வின் ஸ்பான்சர்ஷிப்பையும், வேறு எந்த சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால்,  சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல் சில நாள்களாக ஓங்கி உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்