தமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது: அமைச்சர் ஹர்சவர்தன் பேட்டி
சென்னை: தமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யும் என்றார். மேலும் சென்னையில் இந்த ஆண்டு சர்வதேச அளவில் அறிவியல் விழா நடத்தப்பட உள்ளது, அதில் 10 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார்