மதுரையில் அமலுக்கு வந்த பொதுமுடக்கம்..எதற்க்கெல்லாம் அனுமதி, தடை?

Default Image

மதுரையில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்பொழுது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும்  அமலுக்கு வந்தது.

மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது

இவைக்கெல்லாம் அனுமதி:

  • அத்தியாவசிய பொருட்கள் வாங்க 1 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாவாகவே மட்டுமே நடந்து செல்லவேண்டும்.
  • உணவகங்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்சல் சேவை வழங்க அனுமதி.
  • அம்மா உணவகம் இயங்க அனுமதி.
  • காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை கடைகள் இயங்கும்.
  • ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் மூலம் வர அனுமதி.
  • தகவல் தொடர்ப்பு அலுவலகம் 5% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
  • மத்திய அரசு அலுவலங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

இவைக்கெல்லாம் தடை:

  • ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகள் மூடப்படும்.
  • டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi
4 year old child died
TNGovt - mathiazhagan mla
RR player Vaibhav Suryavanshi