கர்நாடகாவில் ஒரே நாளில் 322 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 9,721.!
கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,721 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,721 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 274 பேர் இன்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 6004 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 08 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்க்ளில், 2,48,190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பால், 4,40,215 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,011 பேர் உயிரிழந்துள்ளனர்.