வசூலை வாரிகுவித்த பத்மாவத்!இந்திய வசூலில் 7-வது இடம் ….
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ. 300 கோடி வசூலையும் 50 நாட்கள் ஓடி தொட்டுள்ளது பத்மாவத் படம். இதன்மூலம் ஹிந்திப் படங்களில் இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்த ஏழாவது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.
எனினும் சர்ச்சைகளால் மிகுந்த கவனத்துக்கு ஆளான பத்மாவத் படம் மகத்தான வசூலைக் கண்டுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியாகாத நிலையிலும் இந்த வசூல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான பத்மாவத், மூன்று மொழிகளிலும் சேர்த்து முதல் வாரத்தில் ரூ. 167 கோடியும் அடுத்த வாரத்தில் ரூ. 69 கோடியும் மூன்றாவது வாரத்தில் ரூ. 32 கோடியும் வசூலித்தது. கடைசியாக தனது 50-வது நாளுக்குப் பிறகு ரூ. 300 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.இதனை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.