#Breaking: தந்தை-மகன் உயிரிழப்பு.. தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு!
கோவில்பட்டி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர். இதனையடுத்து, கோவில்பட்டி கிளைச்சிறையில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் காரணமாக, தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும் என என தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்தார். மேலும், சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.