நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் -ஸ்டாலின்
நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தை கண்டித்து சாத்தான்குளம் பகுதியில் போராட்டம் நடத்தினார்கள்.
இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்துச் சென்ற ஜெயராஜ் அவரது மகன் பென்னீக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். உரிய நீதியும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்தது தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் கனிமொழி எம்.பி., புகார் அளித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்துச் சென்ற ஜெயராஜ் அவரது மகன் பென்னீக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா?
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் @CMOTamilNadu பதிலளிக்க வேண்டும்; உரிய நீதியும் வேண்டும்! pic.twitter.com/LF1Q9Raudh
— M.K.Stalin (@mkstalin) June 23, 2020