சியான்-60ல் புதிதாக இணையும் பிரபலம்.!

Default Image

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் சியான்-60ல் ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரபல நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து 60வது படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணியுடன் ஷெரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். இவர் தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஷெரேயாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே தனது அடுத்த படம் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

Adutha Padam … Directed by @ksubbaraj #hadtobeinthefeed

A post shared by kshreyaas (@shreyaas_krishna) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson