டெக்ஸாமெதோசான் மருந்தை இவர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும்.. WHO அறிவுறுத்தல்!

Default Image

கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த மருந்தை கொரோனவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது.

இதனைதொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள், “டெக்ஸாமெதோசான்” என்ற மருந்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள், கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் இந்த மருந்து குணப்படுத்துகிறது எனவும், சுவாசிக்கத் திணறும் நோயாளிகளில் 5ல் ஒருவருக்கு நல்ல பலனைத் தருகிறது என நடத்திய ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், “டெக்ஸாமெதோசான்” மருந்தை கொரோனவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்