கர்நாடகா அமைச்சரை தவிர குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா.!
கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதகரின் மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா உறுதி.
கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதகரின் மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்தலில் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தந்தைக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் எங்கள் குடும்பத்தின் சோதனை முடிவுகள் வந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக எனது மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா உறுதியானது இந்நிலையில் வர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் இன்று ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் சோதனை செய்தலில் கொரோனா இல்லை என்று அவர் கூறினார். மேலும் சுதாகரின் தந்தை பி.என் கேசவ ரெட்டிக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்தனர், இதனால் இருமல் மற்றும் காய்ச்சலுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,399 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 111 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 5730 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.