மூன்று நாள் ரஷ்ய பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்!
மூன்று நாள் ரஷ்ய பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்!
லடாக்கில் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்திய பரபரப்பான சூழ்நிலையில், ராஜ்நாத் சிங்கின் ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு, அரசியல் தலைமையில் உள்ள உயர் அதிகாரிகளை சந்திப்பார் என கூறப்படுகிறது.
மேலும், ரஷ்யாவுக்கு அதன் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் தொட்டிகளுக்கு கப்பல்களைப் பயன்படுத்தி கடல் வழிக்கு பதிலாக விமானப் பாதை வழியாக அவசரமாக உதிரிபாகங்களையும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களையும் வழங்குமாறு ரஷ்யாவிடம் கூறுவார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூன்று நாள் பயணமாக மாஸ்கோவுக்கு செல்கிறேன். இந்தியா – ரஷ்யா இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒப்பந்தங்களை மேம்படுத்துவதற்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என பதிவிட்டுள்ளார்.