மின்கட்டணம் செலுத்த அவகாசத்தை நீட்டிக்க முடியாது- மின்சாரவாரியம் தகவல்

Default Image

மின்கட்டணம் செலுத்த அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று மின்சாரவாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருவதால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூருக்கு ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ந் தேதி வரை அவகாசம அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது . மேலும் அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம். இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில்  ஜூலை 31-ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது மின்சாரவாரியம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில்,சென்னை ,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட  மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை ஜூலை 15-ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மேலும் பிற மாவட்டங்ககளில் 75 % மேலாக மின்கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்