ஜகமே தந்திரம் தனுஷ் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

Default Image

ஜகமே தந்திரம் படத்தை பற்றி சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவரகாத்திருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம் “. இப்படம்,எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து ஸ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,. ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் கடந்த மாதம் மே 1ம் தேதி வெளியாகவிருந்தது நிலையில் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது, மேலும் தற்பொழுது இந்த படத்தின் கதை பற்றி தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, இந்தியாவில் லோக்கல் தாதாவாக இருந்து நடிகர் தனுஷை அதில் வேலை அமர்த்துவதாகவும், அதற்கு பிறகு தனுஷ் வில்லனாக எப்படி மாறுகிறார் என்பது தான் கதை என்பது தற்போது கசிந்து இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்