ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கொரோனா எப்போது ஒழியும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார் .அவரது அறிக்கையில்,கொரோனா வைரஸ் பரவலுக்கு பலர் மீதும் பழிபோட்டு வந்த முதலமைச்சர் பழனிசாமி . தற்போது இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார். கொரோனா மறைவதுதான் நற்பெயர் தருமே தவிர.அதனை மறைப்பதல்ல! இனியேனும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க முயலுங்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபடும் அரசின் மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.
இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில்,இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் சொன்னதில் என்ன தவறு உள்ளது.முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர், ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரு ம் என்று தெரிவித்துள்ளார்.