மதுரையில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது ஊரடங்கு.. இந்தெந்த துறைகளுக்கு அனுமதி!

Default Image

மதுரையில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்பொழுது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அமலில் வருகிறது.

மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 849 ஆக அதிகரித்துள்ளது. அதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்பொழுது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அமலில் வருகிறது.

இவைக்கெல்லாம் அனுமதி:

  • அத்தியாவசிய பொருட்கள் வாங்க 1 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாவாகவே மட்டுமே நடந்து செல்லவேண்டும்.
  • உணவகங்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்சல் சேவை வழங்க அனுமதி.
  • அம்மா உணவகம் திறக்க அனுமதி.
  • காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை கடைகள் இயங்கும்.
  • ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் மூலம் வர அனுமதி.
  • தகவல் தொடர்ப்பு அலுவலகம் 5% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
  • மத்திய அரசு அலுவலங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

இவைக்கெல்லாம் தடை:

  •  ஞாயிற்றுக்கிழமைகளில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகள் மூடப்படும்.
  • ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தேனீர் கடைகளில் இயங்க அனுமதி இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்