#BREAKING: சென்னையில் 42-ஆயிரத்தை கடந்த கொரோனா.!

சென்னையில் ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதில், 18,372 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,23,756 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 633 பேர் உயிரிழந்துள்ளனர்.