#BREAKING: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 62,000 ஐ தாண்டியது

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 62,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,487 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 34,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இன்று மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.