பர்த்டே சர்ப்ரைஸ்.! தம்பியின் கனவை நனவாக்கும் ராகவா லாரன்ஸ்.!
ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரை ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் . அதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர்.இவருக்கு எல்வின் என்ற தம்பி இருப்பதும், அவர் காஞ்சனா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தனது தம்பியின் பிறந்தநாளை முன்னிட்டு எல்வின் அவர்களின் கனவை நனவாக்கியுள்ளார். ஆம் அவர் தனது தம்பியை ஹூரோவாக அறிமுகப்படுத்துவதாகவும், அந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிக்க போவதாகவும், ராஜா என்பவர் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தை கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Happy birthday my brother Elviin, Here’s my birthday surprise for you. pic.twitter.com/zzp7Anzcl5
— Raghava Lawrence (@offl_Lawrence) June 20, 2020