#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. குறையும் உயிரிழப்பு!! தமிழகத்தில் ஒரே நாளில் 37 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேரும், அரசு மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 35 பேர் உயிரிழந்தனர். மேலும், வேறு நோய் இல்லாத 2 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 623 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் 23 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.