திருப்பூர், ராமநாதபுரத்தில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.!
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக பல நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் நாளுக்கு நாள்கொரோனா வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து, சில மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் பால், மருந்து கடை தவிர பிற கடைகள் மதியம் 3 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.