#BREAKING: மதுரையில் நாளை முதல் ஊரடங்கு அறிவிப்பு.!
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதை தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு அமலாகிறது.
மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு. மேலும், மதுரையில் நாளை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 33% பணியாளர்களுடன் அரசு பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.