தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடரும்.. சுகாதாரத்துறை அமைச்சகம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரே நாளில் சாரிசாரியாக 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள “ஆன்டிபாடி” எனும் நோய்எதிர்ப்புசக்தியை பிரித்து எடுத்து கொரோனா பாதித்த நபருக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன்மூலம் அந்த நபர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவதுடன், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 6 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளதாகவும், 13 பேரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.