கொரோனா பரிசோதனைகளை குறைக்குமாறு சொன்னேன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
கொரோனா பரிசோதனைகளை குறைக்குமாறு சொன்னேன்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உலக அளவில் இந்த கொரோனா வைரஸால், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில், அமெரிக்காவில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுப்பதற்கு அந்நாட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அங்கு பாதிப்பு குறைந்த பாடில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசுகையில், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தால், வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே பரிசோதனை செய்யும் அளவை குறைக்க வேண்டுமென தனது அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.