அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் என் பெயர் கண்டிப்பாக இருக்கும்- ஸ்ரீசாந்த்

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் என் பெயர் கண்டிப்பாக இருக்கும் என்று  கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவர்  கடந்த 2013-ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார், மேலும் இந்த நிலையில் இந்த சூதாட்ட வழக்கு குறித்து விசாரணை நடத்திய டெல்லி கோர்ட்  கடந்த 2015 ஆம் ஆண்டூ கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்தை விடுதலை   உத்தரவிட்டது.

இந்நிலையில் என்பிஏ கூடைப்பந்து உலகின் புகழ்பெற்ற ஆலோசகர் ஒருவர் ஸ்ரீசாந்த்திற்கு ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் காலை 5:30 மணியிலிருந்து 8.30மணி வரை இந்த ஆலோசனைக் நடைபெறுகிறது , இந்நிலையில் மேலும் கேரள ரஞ்சி டிராபி அணியினருடன் சேர்ந்து எர்ணாகுளத்தில் மதியம் 1:30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஸ்ரீசாந்த் வலைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயிற்சியை பற்றி பேசிய ஸ்ரீசாந்த் ஒரு நாளிற்கு 3 மணி நேரம் வாரத்தின் 6 நாட்களுக்கு நான் பந்து வீசி பயிற்சி செய்து வருகிறேன், ஒரு நாளைக்கு 12 ஓவர்களுக்கு மேல்  பந்து வீசுகிறேன்,  முதல் இரண்டு மணி நேரத்திற்கு சிவப்பு நிற பந்தையும், அதற்கு பிறகு வெள்ளை பந்தையும் வைத்து பயிற்சி மேற்கொள்கிறேன் ,என்றும் கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தின் போது எனது பெயர் இருக்கும் அதற்கு என்னால் சிறப்பாக செயல்பட முடியும், மீண்டும் கிரிக்கெட்  பயணத்தை எதிர்கொண்டு நான் வாழ ஆசைப்படுகிறேன். நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடும் பொது மக்கள் என்ன கூறுவார்கள் என்று தான் எனக்கு அச்சம், மேலும் நான் குற்றமற்றவன் குற்ற பிரச்சனையால் யார் யார் இருந்தார்கள் என்பது மக்களுக்கு கூட விரைவில் தெரிந்து கொள்வார்கள் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்