ஒருநாளும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு – உலக சுகாதார நிறுவனம்
ஒருநாளும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பாலா நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 1,83,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா கூறுகையில், பிரேசிலில் 54,771 பேரும், அமெரிக்காவில் 36,617 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் உலக அளவில், இந்த கொரோனா வைரஸால் 87,08,008 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,61,715 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புதிய இறப்புகளில் மூன்றில் இருபங்கு அமெரிக்காவில் தான் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உலக ளவில், வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அதிபர் ட்ரம்ப், பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசுகையில், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தால், வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே பரிசோதனை செய்யும் அளவை குறைக்க வேண்டுமென தனது அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.