அடுத்து ஒரு ஆபத்திற்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம் – உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி
அடுத்து ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உலக அளவில் இந்த கொரோனா வைரஸால், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோன வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் அவர்கள் கூறுகையில், கொரோனா தடுப்பில் அரசு காட்டும் தீவிரத்தை, பொது சுகாதாரத்திலும், குழந்தைகளுக்கான நோய் தடுப்பிலும் காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகள் தவறியிருப்பதால், அடுத்து ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம் என எச்சரித்துள்ளார்.