#BREAKING: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 59,000ஐ தாண்டியது
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 2532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 59,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 32,754 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இன்று மட்டும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1493 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.