Kung flu -கொரோனா வைரஸிற்கு பெயர் வைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றம்ச்சாட்டி வந்த நிலையில் தற்போது குங் காய்ச்சல் (Kung flu ) என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், பெரும்பாலான நாடுகளில் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
சீனாவில் உள்ள உகான் நகரில் தான் கொரோனா கண்டறியப்பட்டது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், சீனாதான் திட்டமிட்டு கொரோனவை உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறார்.குறிப்பாக கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றும் கூறி வந்தார்.மேலும் உகான் வைரஸ் என்றும் கூறி வந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது.நோய்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் கொரோனா வைரஸிற்கு தான் அதிக பெயர்கள் உள்ளது.நானும் இதற்கு ஒரு பெயர் வைக்கிறேன்,குங் காய்ச்சல் (Kung flu ).குங் ஃபூ என்பது சீன தற்காப்புக் கலைகளைக் குறிக்கிறது. மக்கள் இந்த கலையில் சண்டையிட தங்கள் கைகளையும் கால்களையும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது மீண்டும் சர்ச்சையாக மாறியுள்ளது.