இந்திய சர்வதேச விமான சேவை எப்போது.? மத்திய அமைச்சர் பதில்.!
இந்திய விமான சேவையை உலக நாடுகள் தொடங்கிய பின்னர் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பதிலளித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்லியில் உள்ள செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், இந்தியாவில் விமான சேவை எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, உலக நாடுகள் சர்வதேச விமான சேவையை தொடங்கினால் இந்தியாவும் விமான சேவையை தொடங்கும் என்று கூறியுள்ளார். அதோடு பயணிகளுக்காக வந்தே பாரத் திட்டத்தின் 3 மற்றும் 4-வது கட்ட திட்டத்தின் அடிப்படையில் 300 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 1,09,203 பேர் நாடு திரும்பவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உதயன் திட்டத்தின் மூலம் 588விமானங்கள் இயக்கப்பட்டு 1,928 டன் மருத்துவ பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.