அ.தி.மு.க நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்?

Default Image

அ.தி.மு.கவுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வாக்குறுதிப்படி சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டதையும், கூட்டணியிலிருந்து விலகியதையும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டிள்ளார். இந்த நிலையில் ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மத்திய அரசு மதிக்கத் தவறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைகளை நிலைநாட்ட மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் தீர்ப்பு தேதியிலிருந்து 6 வாரங்களுக்குள் அமைய வேண்டும் என்ற உளப்பூர்வ எண்ணம் இருந்தால், மக்களவையில் 3-வது பெரிய கட்சி எனக் கூறிக்கொள்ளும் அதிமுக அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காவிரி, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டும் எண்ணம் கொண்டிருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக துணிச்சலோடு அறிவித்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்