மணலில் புதைக்கப்பட்ட 300வருட பழமையான சிவன் கோயிலை கண்டெடுத்த கிராமவாசிகள்.!

Default Image

300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை ஆந்திராவில் நெல்லூரில் உள்ள பென்னா ஆற்றின் கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பென்னா ஆற்றின் கரையிலிருந்து 300 ஆண்டுகள்
பழமையான வரலாற்று சிறப்புமிக்க நாகேஸ்வர சுவாமி கோயிலை கண்டெடுத்துள்ளனர். ஆந்திராவின் நெல்லூரில் உள்ள செஜெர்லா தொகுதியின் கீழ் உள்ள சில இளைஞர்கள் இணைந்து பென்னா ஆற்றில் மணல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட போது கோவிலை கண்டுபிடித்துள்ளனர். பரசுராமன் அவர்களால் புனிதப்படுத்தப்பட்ட இந்த கோயில் 1850ல் பென்னா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமமே மூழ்கியது.

சுமார் 80ஆண்டுகளுக்கு முன்பு மணல் திட்டுகள் முழு கட்டமைப்பையும் உள்ளடக்கியதாக தங்கள் பெரியவர்கள் கூறியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதனையடுத்து மணல் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள விரும்பியவர்களை கட்டமைப்பு சேதப்படும் என்று கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்த பெருமல்லாபாடு பகுதியை சுற்றியுள்ள மக்கள் கோயிலை காண வருவதாகவும், எனவே சில போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் உதவி இயக்குநர் ராமசுப்பா ரெட்டி கூறியுள்ளார். மேலும் கிராமவாசிகளின் உணர்வை மதிக்கும் வகையில் கோயிலை மீட்டெடுக்கும் திட்டத்தை தாங்கள் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக தங்களது ஊர்களுக்கு திரும்பிய இளைஞர்கள் சிலர் கோயிலை கண்டுபிடிக்க மணல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டதாகவும், இது கிராமவாசிகளின் கனவு என்றும், பெரியவர்கள் வாயிலாக மண்ணில் புதைக்கப்பட்ட இந்த கோயிலை கண்டெடுத்து எங்கள் அனைவரின் கனவும் நனவாகியுள்ளதாக இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த கோயிலை மீட்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்து கோவில்கள் பாதுகாப்பு குழுவின் தலைவரான சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கோவிலின் மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தொல்பொருள் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்