#BREAKING: பிரதமர் மோடி கூறியதை தவறாக திசை திருப்புகிறார்கள் – பிரதமர் அலுவலகம் விளக்கம்
சீனாவுடனான மோதல் குறித்து நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியபோது, சீன ஊடுருவவில்லை என பிரதமர் கூறினார். இதனால், ராகுல்காந்தி, பா. சிதம்பரம் உள்ளிட்டோர் சீன ஊடுருவவில்லை என பிரதமர் பேசியதாக வெளியான தகவலை சுட்டி காட்டி கேள்வி எழுப்பினர்.
அதில், சீனா ஊடுருவவில்லை என்றால் எங்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்..? ஏன் கொல்லப்பட்டனர்..? என,ராகுல்காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீனா ஊடுருவவில்லை இல்லை என்று தான் நரேந்திர மோடி பேசினார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் சீன அத்துமீறல் பற்றி பிரதமர் மோடி கூறியதை தவறாக திசை திருப்புகிறார்கள் என பிரதமர் அலுவலகம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.