லடாக்கில் என்ன செய்கிறது சீனா ? வெளியான செயற்கைகோள் படங்கள்
கடந்த திங்கள் கிழமை இரவு லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்தியாவில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலின் ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது செவ்வாய் கிழமை செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஆனால், ஒரு வாரத்திற்கு முன்அதாவது (ஜூன் 9-ம் தேதி)செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் எந்தவித செயல்பாடுகளும் அதிகமாக இல்லை. கடந்த (ஜூன் 16-ம் தேதி) செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது அந்த புகைப்படத்தில் தெரிகிறது.
India-China clash: A @Reuters analysis of newly released satellite imagery shows how China brought in machinery and cut a trail through the mountainside https://t.co/driB5BcaUz by @SimonScarr @sanjeevmiglani via @ReutersGraphics pic.twitter.com/K5ewJE0et0
— Reuters (@Reuters) June 19, 2020
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சீனா எந்திரங்களை கொண்டு வந்து, இமயமலை மலைப்பாதையில் ஒரு பாதையை உருவாக்குவது மற்றும் நதியை கடக்க பாலம் அமைப்பது போன்று செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.