ராபின்ஹூட் ஆப்-ல் 5 கோடி இழந்ததால் 20 வயது இளைஞர் தற்கொலை.!

Default Image

ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) என்ற சில்லறை முதலீட்டு ஆப் மூலம் 730,165  டாலர் (இந்திய மதிப்பில் 5,56,76,724 கோடி) இழந்ததால் 20 வயது கியர்ன்ஸ் என்ற வாலிபர் கடந்த  12-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக மாணவர் அலெக்சாண்டர் கியர்ன்ஸ், தனது பெற்றோருடன் இல்லினாய்ஸின் நேப்பர்வில்லில் வசித்து வந்துள்ளார்.

இவர், ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) என்ற சில்லறை முதலீட்டு ஆப்பில் ஒரு வாடிக்கையாளராக இருந்து உள்ளார். கியர்ன்ஸ்  சில்லறை முதலீட்டு ஆப்பில் 5 கோடி இழந்துள்ளதாக காட்டியதால்  கடந்த  12-ம் தேதி கியர்ன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

கியர்ன்ஸ் இந்த சில்லறை முதலீட்டு ஆப்பில் எவ்வளவு முதலீடு செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை, கொரோனா வைரஸ் காரணமாக பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது.  இந்த ஆண்டு தொடக்கத்தில் ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) ஆப் 3 மில்லியன் பயனர்களைச் சேர்த்தது என்பது குறிப்பிடப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்