ஆபத்தான நிலையில் உலகம், ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா-உலக சுகாதார அமைப்பு.!
உலகம் இக்கட்டான சூழ்நிலைகளில் சென்று கொண்டிருப்பதாகவும், ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்ந வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் நேற்று மட்டுமே 1.5 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரொஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது, உலகம் ஒரு ஆபத்தான கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் உலக சுகாதார அமைப்பில் நேற்று மட்டுமே 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் இது அதிகம் தான் என்றும் தெரிவித்துள்ளார். இதில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவிலும், தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.