கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இந்த சமயத்தில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வேலை இன்றி தவித்தனர்.இதனிடையே டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .புலம் பெயர் தொழிலாளர்கள், பல்வேறு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது.Garib Kalyan Rojgar Abhiyaan என்ற திட்டத்தை பிரதமர் ஜூன் 20-ஆம் தேதி (இன்று ) தொடங்கி வைக்கிறார் .புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார்.