ஒன்னுபோல பரிசோதனை கட்டணம் …கரார் காட்டி உச்சநீதிமன்றம் பளீர்!!

Default Image

கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் நாடு முழுவதும் ஒன்றுப்போல் இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் நலன் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இவ்வழக்கினை பதிவு செய்து விசாரித்து வந்தது.அவ்வாறு வழக்கின் விசாரணையானது நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர். ஷா அமர்வுமுன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சில மாதங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் ரூ.2,200 ஆகவும் ,மேலும் சில மாநிலங்களில் ரூ.4,500 ஆகவும் உள்ளது. பரிசோதனைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் நிர்ணயம் செய்ய முடியாது. இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று  நீதிபதிகள் ஒருமித்த குரலாக தெரிவித்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா பரிசோதனை கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. என்று தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்  கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம்  ஆனது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக மத்திய அரசே கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்என்று உத்தரவிட்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்