ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைகிறதா??.!

நாடுமுழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்வியை வழங்க ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்கிற அமைப்பை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கறிஞரும்,பாஜக தலைவருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல மனு  ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவின்  விவரம்:
நாடு முழுவதும் 6- 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பொது பாடத்திட்டங்கள் மற்றும் பாடங்கள் கொண்ட சீரான கல்வியை வழங்க வேண்டும். இதற்காக என்று  இந்திய இடைநிலை கல்வி வாரிய சான்றிதழ் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆகியவற்றை இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு என்று தேசிய அளவில் கல்வி கவுன்சில் என்கின்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.சமூக, பொருளாதார, சமத்துவம் மற்றும் நீதியை அடைவதற்கு தனியார் நிர்வகிக்கும் பள்ளிகள், மத்திய மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகள் என எதுவாக  இருந்தாலும் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் உருவாக்க மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வினிகுமார் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை  சுப்ரீம் கோர்ட்டில் விரைவில்  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
author avatar
kavitha