ஜம்மு-காஷ்மீரில் 15 நாளே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி .!

Default Image

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள  ஒரு மருத்துவமனையில் இறந்த மூன்று கொரோனா நோயாளிகளில் 15 நாள் குழந்தை ஒருவர் உயிரிழந்தாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெமினா பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு கொரோனா தோற்று பரிசோதித்ததில் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு மேலும் இதய செயலிழப்பு (சி.சி.எஃப்) ஸ்டெனோசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை பிறந்து 15 நாளே ஆகியநிலையில் கொரோனா தோற்று காரணமாக நேற்று உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ்ஷெரா பகுதியைச் சேர்ந்த 79 வயதுஜூன் 8 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஹைப்போ தைராய்டிசம் நோயால் பாதிக்கப்பட்டார் அந்த நபர் வியாழக்கிழமை இரவு 11:15 மணிக்கு உயிரிழந்தார்.

மேலும் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியைச் சேர்ந்த 80 வயது நபர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்புடன்  ஜூன் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்