டெல்லி மருத்துவமனையின் ஊழியர் கொரோனாவால் பலி ,78 ஊழியர்களுக்கு கொரோனா
கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி மருத்துவமனையின் ஊழியர் பலி .
கொரோனா வைரஸ் காரணமாக இந்து ராவ் மருத்துவமனையின் நோயியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்த 56 வயதான ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார் .இவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தகாகவும்,ஜூன் 9 ஆம் தேதி வரை வேலைக்காக வந்த அவர், டெல்லி ஹார்ட் மற்றும் நுரையீரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 12 முதல் அவருக்கு காய்ச்சல் இருந்ததுள்ளது .அவர் இடையில் நலமடைந்து வந்த நிலையில் , ஆனால் திடீரென இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனை தான் சமீபத்தில் கொரோனாக்கான ஒரு பிரத்யேக வசதியுள்ள மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.இதில் பணிபுரியும் எத்தனை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று கேட்டதற்கு , மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் மொத்தம் 78 பேர் நேர்மறை பரிசோதனை முடிவு வந்ததாகவும் , அவர்களில் 33 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார் .